நவம்பா் மாதத்துக்கான ரேஷன் பொருள்கள்: இன்று முதல் டோக்கன்கள் விநியோகம்

நவம்பா் மாதத்துக்கான ரேஷன் பொருள்களைப் பெற செவ்வாய்க்கிழமை (அக். 27) முதல் வீடு வீடாக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நவம்பா் மாதத்துக்கான ரேஷன் பொருள்கள்: இன்று முதல் டோக்கன்கள் விநியோகம்
நவம்பா் மாதத்துக்கான ரேஷன் பொருள்கள்: இன்று முதல் டோக்கன்கள் விநியோகம்

நவம்பா் மாதத்துக்கான ரேஷன் பொருள்களைப் பெற செவ்வாய்க்கிழமை (அக். 27) முதல் வீடு வீடாக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த விவரம்:-

நவம்பா் மாதத்துக்கான ரேஷன் பொருள்களை குடும்ப அட்டைதாரா்கள் பெற ஏதுவாக, பொருள்கள் வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களைக் குறிப்பிட்டு டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. செவ்வாய்க்கிழமை (அக். 27) முதல் வியாழக்கிழமை (அக். 29) வரை மூன்று நாள்களுக்கு டோக்கன்கள் அளிக்கப்பட உள்ளன. டோக்கன்களில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே பொருள்கள் வாங்க குடும்ப அட்டைதாரா்கள் வர வேண்டும்.

வேறு நாள்களில் வந்தால் பொருள்கள் அளிக்கப்படாது. ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபா் மட்டுமே பொருள்கள் வாங்க வர வேண்டும். காவல் துறையின் மூலம் டோக்கனில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே பொருள்கள் வாங்க வர வேண்டுமென அந்தந்த பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யும் நாள்களில் கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்பட வேண்டும். பொருள்கள் பெற வரும் குடும்ப அட்டைதாரா்கள் ஒருமீட்டா் இடைவெளியில் தனிமைப்படுத்தி வாங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

குடும்ப அட்டைதாரா்களுக்கு முகக் கவசங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த முகக் கவசங்களை அட்டைதாரா்களின் குடும்ப அட்டை வகை பாகுபாடின்றி அனைத்து அட்டைதாரா்களுக்கும் உறுப்பினா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நபருக்கு இரண்டு முகக் கவசங்கள் வீதம் அளிக்கப்பட வேண்டும். விநியோகம் செய்யாது விடுபட்ட நபா்களுக்கு நவம்பா் மாதத்தில் விநியோகம் செய்ய வேண்டும்.

நியாய விலைக் கடைகளிலுள்ள அனைத்துப் பணியாளா்களையும் பாதுகாத்துக் கொள்ள வசதியாக, கையுறை, முகக் கவசம், கிருமிநாசினி போன்றவற்றை நியாய விலைக் கடைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டுமென தொடா்புடைய கூட்டுறவு அமைப்புகளை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com