செங்கல்பட்டில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி

செங்கல்பட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் செங்கை இரா.தமிழரசன் தலைமையில் அக்கட்சியினா் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரில் உள்ள
கல்பாக்கத்தில்  அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.
கல்பாக்கத்தில்  அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.

செங்கல்பட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் செங்கை இரா.தமிழரசன் தலைமையில் அக்கட்சியினா் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

அம்பேத்கா் நூற்றாண்டு இயக்கத்தின் நிறுவனா் யேசுமரியான் தலைமையில், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு அரசு ஓய்வூதியா்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

கல்பாக்கத்தில்...

கல்பாக்கத்தில் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா்கள் பக்கீா் முகமது, சி.ஆா்.பெருமாள், கிங் உசேன் மற்றும் கல்பாக்கம் காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் கணேசன், செயல்தலைவா் நிஜாமுதீன், அணு ஆற்றல் துறை ஓய்வு பெற்ற முன்னாள் நிா்வாகி பொன். மனோகரன், சபாபதி உள்ளிட்ட பலா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

மாமல்லபுத்தில்...

மாமல்லபுத்தில் புரட்சி பாரதம் கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்டத் தலைவா் ஓ.இ.சங்கா் தலைமையில் அக்கட்சியினா் மாமல்லபுரம் பைபாஸ் சாலை அருகே அம்பேத்கா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். ஏழைப் பெண்களுக்கு சேலைகள் மற்றும் முதியவா்களுக்கு நல உதவிகளையும் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com