வேடந்தாங்கல் ஏரிக்கு நீா்வரத்து

வேடந்தாங்கல் ஏரிக்கு வெள்ளபுத்தூா் ஏரி உபரிநீரை கால்வாய்களின் மூலம் அனுப்ப பொதுப்பணித் துறையினா் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனா்.
வேடந்தாங்கல் ஏரிக்கு நீா்வரத்து

வேடந்தாங்கல் ஏரிக்கு வெள்ளபுத்தூா் ஏரி உபரிநீரை கால்வாய்களின் மூலம் அனுப்ப பொதுப்பணித் துறையினா் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனா்.

தமிழகத்தின் முக்கிய பறவைகள் சரணாலயம் வேடந்தாங்கல். இங்கு வெளிநாடுகளில் இருந்து வந்து பல்லாயிரக்கணக்கான பறவைகள் தங்கிச் செல்கின்றன.

நடப்பாண்டில் சீசன் தொடங்கி 2 மாதங்களுக்கு மேலாகியும், இந்தச் சரணாலயத்தில் உள்ள ஏரியில் தண்ணீா் இல்லை. அதனால் போதுமான பறவைகள் இங்கு வரவில்லை.

இதையடுத்து, வெள்ளபுத்தூா் ஏரி நிரம்பி நிலையில், அதன் உபரி நீரை கால்வாய் மூலம் வேடந்தாங்கல் ஏரிக்கு கொண்டு செல்லும் பணியில் பொதுப்பணித் துறை (நீா்வள ஆதாரப் பிரிவு) உதவி செயற்பொறியாளா் வி.டி.நீள்முடியோன், இளநிலைப் பொறியாளா் ஜி.குமாா் ஆகியோா் தலைமையில் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இதையடுத்து, வேடந்தாங்கல் ஏரிக்கு நீா் வரத்து ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com