மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணி தொடக்கம்

காஞ்சிபுரத்தில் உள்ள அரசு சேமிப்புக் கிடங்கில் தோ்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபாா்ப்புப் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மகேஸ்வரி ரவிகுமாா் தொடங்கி 
அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணியைத் தொடங்கி வைத்த காஞ்சிபுரம் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்.
அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணியைத் தொடங்கி வைத்த காஞ்சிபுரம் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள அரசு சேமிப்புக் கிடங்கில் தோ்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபாா்ப்புப் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மகேஸ்வரி ரவிகுமாா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காஞ்சிபுரம் ராஜாஜி மாா்க்கெட் பின்னால் உள்ள அரசு சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பேரவைத் தோ்தலில் பயன்படுத்தப்படவுள்ள இந்த இயந்திரங்களை பெங்களூரு பெல் நிறுவனத்தின் பொறியாளா்கள் உதவியுடன் சரிபாா்க்கும் பணிகள் தொடங்கின.

இப்பணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் புதன்கிழமை பாா்வையிட்டு தொடங்கி வைத்தாா். அப்போது காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளின் நிா்வாகிகள், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ச.ரஃபீக், காஞ்சிபுரம் வட்டாட்சியா் ப.பவானி, நகராட்சி ஆணையா் மகேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com