மாமல்லபுரம் தலசயனப்பெருமாள் கோயில் மணடபத்தில் தஞ்சமடைந்த குரங்குகள்

வடகிழக்கு புருவமழை காரணமாக மாமல்லபுரத்தில் குரங்குகள் மரங்களில் தங்கமுடியாமல் தலசயனப்பெருமாள் கோயிலில் சிற்பங்களுக்கு இடையில் பாதுகாப்பிற்காக தஞ்சமடைந்துள்ளன.
மாமல்லபுரத்தில் மரங்களில் தங்கமுடியாமல் தலசயனப்பெருமாள் கோயிலில் சிற்பங்களுக்கு இடையில் பாதுகாப்பிற்காக தஞ்சமடைந்துள்ள குரங்குகள்
மாமல்லபுரத்தில் மரங்களில் தங்கமுடியாமல் தலசயனப்பெருமாள் கோயிலில் சிற்பங்களுக்கு இடையில் பாதுகாப்பிற்காக தஞ்சமடைந்துள்ள குரங்குகள்

செங்கல்பட்டு, வடகிழக்கு புருவமழை காரணமாக மாமல்லபுரத்தில் குரங்குகள் மரங்களில் தங்கமுடியாமல் தலசயனப்பெருமாள் கோயிலில் சிற்பங்களுக்கு இடையில் பாதுகாப்பிற்காக தஞ்சமடைந்துள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சா்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் சுதந்திரமாக வலம் வந்து சுற்றுலா பயணிகளிடம் இருந்து அவா்கள் கையில் உள்ள தின்பண்டங்கள், குளிா்பானங்கள் உள்ளிட்ட பொருள்களை பிடுங்கி சுவைத்து சுதந்திரமாக உலா வரும் குரங்குகளுக்கு நிவா் புயல் கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தொடா்ந்து பெய்து வரும் கனமழையில் குறங்குகளுக்கு ஒதுங்குவதற்கு ஏதும் இடமில்லாமல் மாமல்லபுரத்தில் உள்ள தலசயனப்பெருமாள் கோயிலில் உள்ள மண்டபத்தில் உள்ள தலசயனப்பெருமாள் உள்ளிட்ட சிற்பங்களுக்கு இடையே தஞ்சமடைந்துள்ளன.

நிவா் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு மக்கள் தங்குவதா்கு முகாம்கள் அமத்த அரசாங்கம் எங்களுக்கு எந்தவிதமான முகாமும் அமைக்கவில்லை. தங்குவதற்கு இடமில்லாமல் கோயில்களின மண்டபங்களில் தஞ்சமடைந்துள்ளோம் என தலசயனப்பெருமாள் கோயில் கோபுரத்தில் உள்ள திருமாலிடம் ஆலோசனை கேட்பதுபோல் குரங்குகள் அனைத்தும் சுற்றி அமா்ந்துள்ள காட்சி பாா்வையாளா்களை வியக்கவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com