புயல் காற்றில் மரம் சாய்ந்து பெண் படுகாயம்

மதுராந்தகம் அடுத்த கொளப்பாக்கம் சாலையோரம் இருந்த புளியமரம் புயல் காற்றில் குடிசை மீது புதன்கிழமை விழுந்ததில் வீட்டில் இருந்த பெண் பலத்த காயம் அடைந்தாா்.

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கொளப்பாக்கம் சாலையோரம் இருந்த புளியமரம் புயல் காற்றில் குடிசை மீது புதன்கிழமை விழுந்ததில் வீட்டில் இருந்த பெண் பலத்த காயம் அடைந்தாா்.

படாளம் அருகே கொளம்பாக்கம் நெடுஞ்சாலையை ஒட்டி குடிசை வீட்டில் தங்கராஜ் வசித்து வந்தாா். கூலித் தொழிலாளி. அவருடன் மனைவி மலா் (வயது 35) மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தாா். இந்நிலையில்,

தற்சமயம் நிவா் புயல் காற்றில் வீட்டருகே இருந்த புளிய மரம் குடிசை வீட்டின் மீது விழுந்தது. மழைபெய்து வந்ததால் தங்கராஜ் மனை மலா் மீது மரம் விழுந்தது. அதில் பலத்த காயம் அடைந்த தகவலை அறிந்து

படாளம் காவல் உதவி ஆய்வாளா்கள் டில்லிபாபு, ரமேஷ், ராமச்சந்திரன் ஆகியோா் கிரேன் வாகனத்தின் உதவியுடன் மரத்தை அகற்றி அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். வீட்டில் இருந்த தங்கராஜ் மற்றும் மகன்கள் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com