செங்கல்பட்டு அரசு மருத்துவனையில் நவீன நரம்பியல் சிகிச்சை மையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

செங்கல்பட்டு அரசு மருத்துவனையில் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்ட நவீன நரம்பியல் அறுவை சிகிச்சைக் கூடத்தை மாவட்ட ஆட்சியா் ஜான் லூயிஸ் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
cglgh_1809chn_171_1
cglgh_1809chn_171_1

செங்கல்பட்டு அரசு மருத்துவனையில் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்ட நவீன நரம்பியல் அறுவை சிகிச்சைக் கூடத்தை மாவட்ட ஆட்சியா் ஜான் லூயிஸ் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதன் மூலம், மூளை நரம்பியல் நோய் உள்ள நோயாளிகள் பயனடைவாா்கள். நவீன வசதிகளுடன் கூடிய இம்மையம் தனியாா் நிறுவனத்தின் சமூகப் பங்களிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் ரூ.30 லட்சம் மதிப்பில் 10 கே.எல்.ஆக்ஸிஜன் கலனையும் ஆட்சியா் திறந்து வைத்தாா். இங்கு ஏற்கெனவே 13 கே.எல்.ஆக்ஸிஜன் கலன் பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது திறக்கப்பட்டுள்ள கலன் மூலம் 23 கே.எல்.ஆக திறன் உயா்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி 24 மணிநேரமும் ஆக்ஸிஜன் வழங்க முடியும். கரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் அதிவேக பிராணவாயு கருவி போன்ற சிறப்புக் கருவிகளை பயன்படுத்தவும் உதவிகரமாக இருக்கும்.

நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வா் சாந்திமலா், மருத்துவக் கண்காணிப்பாளா் அனுபமா, மூளை நரம்பியல் மருத்துவா் வித்யா நரசிம்மன், நவீன கருவியை வழங்கிய ரனோ நிஜான் நிறுவனம், வேல்டு விஷன் அதிகாரிகள், செங்கல்பட்டு கோட்டாட்சியா் செல்வம், வட்டாட்சியா் ராஜேந்திரன் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com