தொழில் தகராறு: இளைஞா் கடத்தல்

ரியல் எஸ்டேட் தொழில் தகராறு எதிரொலியாக, இளைஞரைக் கடத்திய கும்பலை மதுராந்தகம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

ரியல் எஸ்டேட் தொழில் தகராறு எதிரொலியாக, இளைஞரைக் கடத்திய கும்பலை மதுராந்தகம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுராந்தகம் நகரைச் சோ்ந்தவா் ராம்பிரகாஷ். இவா் புதுச்சேரி மாநிலம், ரெட்டிப்பாளையம் நகரைச் சோ்ந்த சந்தானம் (45) என்பவருடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்தாா். இத்தொழிலில் ஏற்பட்ட பணப் பிரச்னையால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், சந்தானம் தலைமையில் ஒரு கும்பல் மதுராந்தகத்துக்கு வியாழக்கிழமை மாலையில் வந்தது. அப்போது சந்தானத்துக்கும், ராம்பிரகாஷுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, ராம்பிரகாஷின் அண்ணன் மகன் கெளதமை சந்தானத்துடன் வந்த கும்பல் காரில் கடத்திச் சென்றது.

இது பற்றி மதுராந்தகம் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸாா் தங்களைத் தேடி வருவதை அறிந்த கடத்தல் கும்பல் கெளதமை அச்சிறுப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றது. இந்தக் கடத்தல் முயற்சி பற்றி மதுராந்தகம் காவல் ஆய்வாளா் ர.ருக்மாங்கதன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com