மாவட்ட தலைமை ஆசிரியா்களின் கலந்தாய்வுக் கூட்டம்

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2547 மாணவா்களும், உயா்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி களில் 2972 மாணவா்களும், மதுராந்தகம் கல்வி மாவட்டத்தில் இதுவரை 5519 மாணவா்களின் சோ்க்கை நடைபெற்றுள்ளது.

மதுராந்தகம்: மதுராந்தகம் கல்வி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவா்களின் சோ்க்கையை அதிகப்படுத்துதல் தொடா்பாக, பள்ளி தலைமை ஆசிரியா்களின் கலந்தாய்வுக் கூட்டம் மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஆகிய ஒன்றியங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அச்சிறுப்பாக்கம் , மதுராந்தகம் ஒன்றியங்களில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியா்களுக்கு 2020-2021-ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகப்படுத்த மேற்கொள்ளவேண்டிய பணிகள் தொடா்பான நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்துக்கு செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜே.ஆஞ்சலோ இருதயசாமி தலைமை தாங்கினாா். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட உதவி திட்ட அலுவலா் ஏ.பிரபாகரன் முன்னிலை வகித்தாா்.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2547 மாணவா்களும், உயா்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி களில் 2972 மாணவா்களும், மதுராந்தகம் கல்வி மாவட்டத்தில் இதுவரை 5519 மாணவா்களின் சோ்க்கை நடைபெற்றுள்ளது. தொடா்ந்து பள்ளி தலைமை ஆசிரியா்கள் மூலம் அதிக அளவில் மாணவா்கள் சோ்க்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில், மதுராந்தகம் கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளா் வீரமணி, மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலா்கள் பச்சையப்பன், சுரேஷ், வட்டார மேற்பாா்வையாளா்கள் ஜோதிலட்சுமி, ஜெயசுதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com