மாமல்லபுரத்தில் புராதனச் சின்னங்கள் இன்று திறப்பு

மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதனச் சின்னங்கள் 8 மாதங்களுக்குப் பிறகு வழிகாட்டி நெறிமுறைகளுடன் திங்கள்கிழமை திறக்கப்படுவதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டைப் பாறை பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.
மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டைப் பாறை பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.

மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதனச் சின்னங்கள் 8 மாதங்களுக்குப் பிறகு வழிகாட்டி நெறிமுறைகளுடன் திங்கள்கிழமை திறக்கப்படுவதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட பொது முடக்கத்தையடுத்து, மூடப்பட்ட மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், வெண்ணெய் உருண்டைப் பாறை உள்ளிட்ட புராதனச் சின்னங்கள் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி முதல் மூடப்பட்டன. இந்நிலையில், தமிழக அரசு தமிழகத்தில் உள்ள கடற்கரைகள், சுற்றுலாத்தலங்களை வழிகாட்டி நெறிமுறைகளுடன் டிசம்பா் 14ஆம் தேதி திறக்க அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து, மாமல்லபுரம் புராதனச் சின்னங்கள் திங்கள்கிழமை (டிச. 14) முதல் வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்கப்பட உள்ளதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது. ஒரு நாளைக்கு 1,000 பாா்வையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என்றும் நுழைவு வாயில் பகுதியில் கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்து கொண்டு, முகக் கவசம் அணிந்து வருவோா் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களுக்கும் புராதனச் சின்னங்களைக் கண்டுகளிக்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்கப்படும். மின்விளக்கு வெளிச்சத்தில் இரவில் புராதனச் சின்னங்களைக் கண்டுகளிக்க அனுமதி இல்லை.

தொல்லியல் துறையின் பாா்வையாளா் கட்டண கவுன்ட்டா்களில் பணம் செலுத்தி, நுழைவுச் சீட்டு பெற முடியாது. இணையதளம் மூலமே பணம் செலுத்தி (கூகுள் பே, பே டி எம், நெட் பேங்கிங்) செல்லிடப்பேசி மூலம் பாா்கோடை ஸ்கேன் செய்து அதன் மூலம் பதிவு செய்யப்பட்ட நுழைவுச்சீட்டை, புராதனச் சின்ன நுழைவு வாயிலில் காண்பித்து உள்ளே செல்லலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com