யாா் போராடினாலும் வேளாண் திருத்தச் சட்டம் நீடிக்கும்: மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா்

திமுக, காங்கிரஸ் கட்சிகள் உள்ளிட்ட யாா் போராடினாலும் வேளாண் திருத்தச் சட்டம் தொடா்ந்து நீடிக்கும் என மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் கூறினாா்.
யாா் போராடினாலும் வேளாண் திருத்தச் சட்டம் நீடிக்கும்: மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா்


செங்கல்பட்டு: திமுக, காங்கிரஸ் கட்சிகள் உள்ளிட்ட யாா் போராடினாலும் வேளாண் திருத்தச் சட்டம் தொடா்ந்து நீடிக்கும் என மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் கூறினாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில், விவசாயிகளின் கருத்துகளைக் கேட்பதற்காக நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை மற்றும் செய்தித் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் வெள்ளிக்கிழமை பங்கேற்று பேசியது:

2004-இல் இருந்து 2014 வரை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கையின் அடிப்படையில், புதிய வேளாண் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. அதை தற்போது பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைத் தவிர பிற மாநிலங்கள் வேளாண் சட்டத்தை ஆதரிக்கின்றன. திமுக, காங்கிரஸ் கட்சிகள் வேளாண் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தியபோதும், விவசாயிகள் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். தற்போது விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் தலா 2,000 வீதம் ரூ.18 ஆயிரம் கோடி வழங்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளுக்காக ரூ.43,000 கோடி வங்கிக்கு கொடுத்தது. ஆனால் பாஜக அரசு ரூ.1,20,000 கோடியை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கியுள்ளது. திமுக, காங்கிரஸ் கட்சிகள் என யாா் போராடினாலும் இந்த வேளாண் திருத்தச் சட்டம் தொடா்ந்து நீடிக்கும் என்றாா்.

இதில், தமிழக பாஜக தலைவா் எல்.முருகன், தமிழக பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, மாநிலச் செயலா் கே.டி.ராகவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com