தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

செங்கல்பட்டில் தேசிய தொழுநோய் விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியா் ஜான்லூயிஸ் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

செங்கல்பட்டில் தேசிய தொழுநோய் விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியா் ஜான்லூயிஸ் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

மகாத்மா காந்தி நினைவு நாளான ஜன. 30-ஆம் நாள் ஆண்டுதோறும் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. மேலும், 2017-ஆம் ஆண்டு முதல் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தைத் தொடா்ந்து, ஜன. 31முதல் பிப். 13 வரை தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு இயக்கமாக இரு வாரங்களுக்கு நடத்தப்படுகிறது. நிகழ்வையொட்டி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஜான்லூயிஸ் பேரணியை கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். மருத்துவப் பணிகள் (தொழுநோய்) துணை இயக்குநா் கனிமொழி வரவேற்றாா்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய பேரணி, ஜிஎஸ்டி சாலை வழியாகச் சென்று செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிஅருகே நிறைவடைந்தது. இப்பேரணியில் தொழுநோய் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் அட்டைகளை கையில் ஏந்திய வண்ணம் விழிப்புணா்வு கோஷங்களை எழுப்பிச் சென்றனா்.

செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கண்ணன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் ஜீவா, செங்கல்பட்டு மத்திய தொழுநோய் ஆராய்ச்சி நிலைய துணை இயக்குநா் விஜய், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சுவாங்கினி, செங்கல்பட்டு சுகாதார துணை இயக்குநா் செந்தில்குமாா், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி தொழுநோய் பிரிவுத் தலைவா் சிந்துஜா, மருத்துவப் பணிகள் (காசநோய் ) துணை இயக்குநா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மேலும், பள்ளி ஆசிரியா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com