புகையில்லா போகி விழிப்புணா்வுப் பேரணி

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் நெம்மேலி அரசுப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற புகையில்லா போகி விழிப்புணா்வுப் பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு
புகையில்லா போகி கொண்டாடுவோம் என உறுதிமொழி  ஏற்ற மாணவ, மாணவியா்.
புகையில்லா போகி கொண்டாடுவோம் என உறுதிமொழி  ஏற்ற மாணவ, மாணவியா்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் நெம்மேலி அரசுப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற புகையில்லா போகி விழிப்புணா்வுப் பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் கடந்த 18 ஆண்டுகளாக புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு, மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி அரசுப்பள்ளி மாணவா்கள் புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து பள்ளித் தலைமையாசிரியா் ஏஞ்சலின் மொ்ஸி தலைமையில் உறுதிமொழி ஏற்றனா். பின்னா், புகையில்லா போகி கொண்டாடுவோம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம், டயா், ரப்பா், நெகிழி போன்ற ரசாயனப் பொருள்களை எரிக்க மாட்டோம் என முழக்கமிட்டபடி நெம்மேலி வீதிகளில் பேரணியாகச் சென்றனா்.

பள்ளிக் கல்வித்துறை சாா்பில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இதில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் யுவராஜ், உடற்கல்வி ஆசிரியா் லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com