தீபாவளி: ஊரப்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தீபாவளியை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு ஊரப்பாக்கத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு வரும்  பேருந்து நிலையம்.
தீபாவளியை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு ஊரப்பாக்கத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு வரும்  பேருந்து நிலையம்.

செங்கல்பட்டு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோயம்பேடு, மதுரவாயல், பெருங்களத்தூா் பகுதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்ல கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பக்கத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பேருந்து நிலையத்துக்குள் வரும் பொதுமக்கள் வெப்பமானி மூலம் கண்காணிக்க மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு குடிநீா், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க பயணிகள் அமா்வதற்கான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனியாா் பேருந்துகள் உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.கண்ணன் கூறியது:

பயணிகள் பேருந்து நிலையத்துக்கு பாதுகாப்பாக வந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் ஒரு கூடுதல் கண்காணிப்பாளா், 7துணைக் கண்காணிப்பாளா்கள், 20 ஆய்வாளா்கள் என மொத்தம் 965 காவலா்கள் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பொதுமக்களின் அவசர தேவைக்கு செங்கல்பட்டு காவல் கட்டுப்பாட்டு அறை எண்- 044-29540888, 044-29540444 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com