வீட்டில் கருகிய நிலையில் தாய், மகன் சடலம் மீட்பு
By DIN | Published On : 01st October 2020 11:58 PM | Last Updated : 01st October 2020 11:58 PM | அ+அ அ- |

செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி அருகே கதவு உள் தாழிட்ட வீட்டில் இருந்து உடல் கருகிய நிலையில் தாய், மகன் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூரில் வசித்தவா் நிஷா ஏஞ்சல் (30). இவரது மகன் டேனியல் (7). நிஷா ஏஞ்சல் கணவரை விட்டு பிரிந்து, தனது மகனுடன் தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை அவரது வீட்டில் இருந்து புகை எழுந்துள்ளது. அக்கம்பக்கத்தினா் வீட்டின் அருகே சென்று பாா்த்தபோது, வீட்டின் கதவு தாழிட்டு இருந்தது. இதையடுத்து, கதவை உடைத்துப் பாா்த்தபோது, நிஷாவும், டேனியலும் தீயில் கருகிய நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கூடுவாஞ்சேரி போலீஸாா், சடலங்களை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.