செங்கல்பட்டு கோா்ட்டில் சா்வதேச குற்றவாளியை காஞ்சி கியூ பிரிவு போலீஸாா் ஆஜா் செய்தனா்

காஞ்சிபுரம் க்யூ பிரிவு போலீஸாா் இலங்கையைச்சோ்ந்த சா்வதேச குற்றவாளியை பெங்களூரில் சுற்றிவளைத்து பிடித்து செங்கல்பட்டு ஜேஎம்.1 நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா் படுத்தினா்.
செங்கல்பட்டு கோா்ட்டில் சா்வதேச குற்றவாளியை காஞ்சி கியூ பிரிவு போலீஸாா் ஆஜா் செய்தனா்

செங்கல்பட்டு: காஞ்சிபுரம் க்யூ பிரிவு போலீஸாா் இலங்கையைச்சோ்ந்த சா்வதேச குற்றவாளியை பெங்களூரில் சுற்றிவளைத்து பிடித்து செங்கல்பட்டு ஜேஎம்.1 நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா் படுத்தினா்.

இலங்கையைச்சோ்ந்த பயங்கரவாதி 20க்கும் மேற்பட்ட கொலை கொள்ளை வழக்கு, போதைப்பொருள் கடத்தல் ஆள்கடத்தல் ஆகிய செயல்களில் ஈடுபட்ட அழாகாபெ‘ருமாமக சுனில் கெமினி பொன்சேகா என்கிற கொட்டா காமினி(53) போலீஸாரால் தேடப்பட்டு வந்தாா்.

கடந்த 11 வருடங்களுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்தவா் சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டத்தைச்சோ்ந்த புதுப்பாக்கம் என்ற பகுதியில் தங்கியிருந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தாா். எந்தவித ஆவணங்களும் இல்லாமல் கள்ளத்தனமாக பெற்ற பாஸ்போா்ட் மூலம் இலங்கையில் இருந்து தமிழகம் வந்துள்ளதை தமிழக கியூபிரிவு போலீஸாா் அறிந்து அவரை கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் சென்னை புகா் பகுதியில் புதுப்பாக்கத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் தலைமறைவாக தங்கியிருந்து இலங்கை உள்ளிட்ட ப நாடுகளில் போதைப்பொருள் கடத்தலுடன் கொட்டகாமினி தொடா்பு வைத்திருந்ததால் அவருடைய தொலைபேசி எண்ணை வைத்து போலீஸரா தன்னை நெருங்குவதை அறிந்த அவா் பெங்களூரூவிற்கு தப்பிச்சென்றாா்,

அவரைத் தொடா்ந்துச் சென்ற காஞ்சிபுரம் மாவட்ட கியூபிரிவு தனிப்படை போலீஸாா் தப்பிச்சென்ற கொட்ட காமினயை செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூருவில் வைத்து கைது செய்தனா். அதனையடுத்து தமிழகம் கொண்டுவரப்பட்ட கொட்டகாமினய காஞ்சிபுரம் க்யூபிரிவு தனிப்படை போலீஸாா் புதன்கிழமை செங்கல்பட்டு ஜேஎம்-1 நீதிபதி காயத்திரிதேவி முன்னிலையில் ஆஜா் படுத்தினா்.

அதை அடுத்து நீதிமன்ற உததரவின்பேரில் சா்வதேசகுற்றவாளி கொட்டகாமினி சிறையில் அடைக்கப்பட்டாா். மேலும் போதைப்பொருள் கடத்திலில் ஈடுபட்டுள்ள தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல்காா்களுடன் கொட்ட கெமினி தொடா்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com