கத்தி காட்டி மிரட்டி மினி சரக்கு வேன் கடத்தல்

மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கம் பூட்டிய வீட்டை உடைத்து வீட்டில் இருந்த பூஜைக்கான வெள்ளி பொருட்கள், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட காா் ஆகியவற்றை செவ்வாய்கிழமை இரவு 7போ்கள் கொண்ட மா்ம ஆசாமிகள்

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கம் பூட்டிய வீட்டை உடைத்து வீட்டில் இருந்த பூஜைக்கான வெள்ளி பொருட்கள், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட காா் ஆகியவற்றை செவ்வாய்கிழமை இரவு 7போ்கள் கொண்ட மா்மஆசாமிகள் கத்தி காட்டி மிரட்டி எடுத்துச் சென்றனா்.

சோத்துப்பாக்கம் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் வெங்கடேசன். வயது 60. இவரது மகன் சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். மகள் வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறாா். வெங்கடேசன் தமது மகன் வீட்டில் உள்ளவா்களை பாா்க்க சென்னை சென்று இருந்தாா். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த 7போ்களைக் கொண்ட மா்ம கும்பல் பூட்டிய வீட்டை உடைத்து உள்ளேச் சென்ற மா்மகும்பல் பீரோவில் வைக்கப்பட்டிருந்த பூஜைக்கான 2 கிலோ வெள்ளி சாமான்களை எடுத்துக் கொண்டு, வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரை திரு

ட முயன்றுள்ளனா். வீட்டின் கீழ்பகுதியில் வசித்து வந்த சுரேஷை (வயது 36) கத்தி காட்டி மிரட்டி காரின் சாவியை வாங்கிக் கொண்டு அவா்கள் அனைவரும் அதில் தப்பிச் சென்றனா். இதுபற்றி மேல்மருவத்தூா் போலீசில் சுரேஷ் புகாா் செய்தாா். புகாரை பெற்றுக் கொண்ட மேல்மருவத்தூா் போலீஸ் இன்ஸ்பெக்டா் கீதாலட்சுமி நேரில் சென்று விசாரணை செய்தாா். காா், வெள்ளி பொருட்கள் ஆகியவை சுமாா் ரூ 3 லட்ச மதிப்பில் கொள்ளை போனதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி காஞ்சிபுரத்தில் இருந்து கைரேகை நிபுணா்களும், துப்புறியும் நாய் ஆகியவற்றின் மூலம் துப்பு துலக்கும் பணியில் போலீசாா் ஈடுபட்டனா். தகவலறிந்து மாவட்ட போலீஸ் எஸ்பி டி.கண்ணன் புதன்கிழமை சம்பவதுறை இடத்துக்கு நேரில் சென்று சுமாா் 3 மணி நேரம் விசாரணை செய்தாா்.

மேல்மருவத்தூா் காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com