சாலை விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் பலி
By DIN | Published On : 20th October 2020 12:48 AM | Last Updated : 20th October 2020 12:48 AM | அ+அ அ- |

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த மாமண்டூா் சாலையில் லாரி மோதி, பைக்கில் சென்றவா் ஞாயிற்றுக்கிழமை இறந்துபோனாா்.
கட்டியாம்பந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் துலுக்காணம். இவரது மகன் பூபாலன். (வறயது 31). இவா் சிங்கபெருமாள் கோயில் பகுதியைச் சோ்ந்த தனியாா் தொழிற்நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை தனது பைக்கில் செங்கல்பட்டில் இருந்து தமது சொந்த ஊருக்கு சென்றுக் கொண்டிருந்தாா். மாமண்டூா் அருகே சாலையை கடக்க முயன்றபோது சரக்கு லாரி அவா் மீது மோதியதில், நிகழ்விடத்தில் இறந்து போனாா். இது குறித்து படாளம் காவல் ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரித்து
வருகிறாா். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவா் தப்பி ஓடிவிட்டாா்.