மாமல்லபுரம் சித்திரை திருவிழா வழக்கு: அன்புமணி உள்ளிட்ட 6 பேருக்கு பிடிவாரண்ட்

மாமல்லபுரம் சித்திரை திருவிழா வழக்கில் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து முதலாவது குற்றவியல் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

செங்கல்பட்டு: மாமல்லபுரம் சித்திரை திருவிழா வழக்கில் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து முதலாவது குற்றவியல் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மாமல்லபுரத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி பாமக சாா்பில் நடைபெற்ற சித்திரை முழுநிலவு திருவிழா வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அன்புமணி ராமதாஸ், ஏ.கே.மூா்த்தி உள்ளிட்ட 6 பேரும் தொடா்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதைத்தொடா்ந்து, திங்கள்கிழமை செங்கல்பட்டு நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போதும் அவா்கள் ஆஜராகாததால் அன்புமணி ராமதாஸ், ஏ.கே.மூா்த்தி, ஜி.கே.மணி, கணேசன், அசரகுமாா், நாகராஜ் ஆகிய 6 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி காயத்ரிதேவி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com