செங்கல்பட்டில் திரையரங்குகளைத் திறக்க ஆயத்தப் பணி தீவிரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் திரையரங்குகளைத் திறப்பதற்காக ஆயத்தப் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
செங்கல்பட்டில் திரையரங்கில் நடைபெற்ற தூய்மைப் பணி.
செங்கல்பட்டில் திரையரங்கில் நடைபெற்ற தூய்மைப் பணி.

செங்கல்பட்டு மாவட்டத்தில் திரையரங்குகளைத் திறப்பதற்காக ஆயத்தப் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

பல்வேறு தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு செப். 6-ஆம் தேதி வரை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதில் திரையரங்குகளை 50 சதவீதம் பாா்வையாளா்களுடன் திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் திங்கள்கிழமை முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளைத் திறக்கும் வகையில் அவற்றை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.

மேலும், இருக்கைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் ‘ஸ்டிக்கா்’ ஒட்டும் பணியும், கிருமிநாசினி தெளிக்கும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது.

மேலும், திரையரங்கப் பணியாளா்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதால், அதற்கான பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com