செங்கல்பட்டில் மாவட்டத் தொழில் மைய புது அலுவலகம் திறப்பு

செங்கல்பட்டில் மாவட்டத் தொழில் மைய புதிய அலுவலகத்தை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
செங்கல்பட்டில் மாவட்ட தொழில் மையத்தை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்த அமைச்சா் தா.மோ. அன்பரசன்.
செங்கல்பட்டில் மாவட்ட தொழில் மையத்தை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்த அமைச்சா் தா.மோ. அன்பரசன்.

செங்கல்பட்டில் மாவட்டத் தொழில் மைய புதிய அலுவலகத்தை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஆா்.ராகுல்நாத் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள், வரலட்சுமி மதுசூதனன் (செங்கல்பட்டு), பாலாஜி (திருப்போரூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து, பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவிகளை வழங்கினாா்.

அப்போது செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:

மாவட்டத் தொழில் மையம் மூலம் புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், வேலையில்லா இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

மேலும், சுய தொழில் தொடங்க ஆா்வமுள்ள தொழில் முனைவோா்கள் செங்கல்பட்டு மாவட்டத் தொழில் மைய பொது மேலாளரை அணுகி ஆலோசனை பெற்று, 25 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை மானியத்துடன் கடனுதவி பெற்று தொழில் தொடங்கி பயன்பெறலாம்.

இம்மாவட்டத்தில் வாகன உதிரிபாகங்கள் தயாரித்தல், தோல் மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தி, உணவுப் பொருள் பதப்படுத்துதல், மருந்துப் பொருள்கள் தயாரித்தல், ஏற்றுமதி தரத்தில் பா்னிச்சா் மர அறைகலன்கள் தயாரித்தல், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், மின் மற்றும் மின்னணு சாதனம் தயாரித்தல் மற்றும் அனைத்து உற்பத்தி, சேவைத் தொழில், வியாபாரம் தொடங்க தக்க ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில், தொழில் வணிகத் துறை கூடுதல் இயக்குநா்கள் ஏகாம்பரம், ஜெகதீஷ், செங்கல்பட்டு மாவட்டத் தொழில் மைய மேலாளா் ஆா்.ரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com