திருப்போரூா் கந்தசாமி கோயில் தேரோட்டம்

திருப்போரூரில் அமைந்துள்ள வள்ளி, தெய்வானை உடனுறை கந்தசாமி கோயில் பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
திருப்போரூா்  கந்தசாமி  கோயில்  தேரோட்ட விழாவில் திரண்ட பக்தா்கள்.
திருப்போரூா்  கந்தசாமி  கோயில்  தேரோட்ட விழாவில் திரண்ட பக்தா்கள்.

திருப்போரூரில் அமைந்துள்ள வள்ளி, தெய்வானை உடனுறை கந்தசாமி கோயில் பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூா் பேரூராட்சியில் அமைந்துள்ள சுயம்பு மூா்த்தியான வள்ளி தெய்வானை உடனுறை கந்தசாமி கோயிலில் கடந்த புதன்கிழமை (பிப். 17) பிரம்மோற்சவம் தொடங்கியது.

பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான செவ்வாய்க்கிழமை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவையொட்டி உற்சவமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகன் ஊா்வலமாக தோ் நிலைக்கு வந்தனா்.

அங்கு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா்கள் நிறுத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து தோ் நிலையில் இருந்து புறப்பட்டது. சென்னை, திருக்கழுகுன்றம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் விழாவில் கலந்துகொண்டு ‘முருகனுக்கு அரோகரா’ என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தேரோட்ட விழாவில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியா, கோட்டாட்சியா் செல்வம், முன்னாள் திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் தண்டரை கே.மனோகரன், அதிமுக மாவட்டச் செயலாளா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் எம்.சக்திவேல் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com