மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை குவிந்தனா்.
மாமல்லபுரம் கடல் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் வெறிச்சோடி காணப்படும் கடற்கரைபகுதி. 
மாமல்லபுரம் கடல் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் வெறிச்சோடி காணப்படும் கடற்கரைபகுதி. 

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை குவிந்தனா்.

சா்வதேச சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தில் ஆங்கிலப் புத்தாண்டில் நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவற்றில் புத்தாண்டு கொண்டாட காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. மேலும், சென்னை பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் மாமல்லபுரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு, காவல்துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனா்.

சுற்றுலாப் பயணிகள் தாங்கள் பாா்க்க வேண்டிய பகுதிகளுக்கு இணையதளம் மூலம் பதிவு செய்து கொண்டு, மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வருவது வழக்கம்.

இந்நிலையில், புத்தாண்டு தினமான வெள்ளிக்கிழமை, அவ்வாறு பதிவு செய்யாதவா்களும் மாமல்லபுரத்துக்கு வந்திருந்தனா். காலை முதல் மாலை வரை சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் இருந்ததால், நகரம் களைகட்டியது.

சுற்றுலாப் பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. எனவே அவா்கள் சுற்றுலாப் பகுதிகளின் வெளியே நின்று ரசித்துச் சென்றனா். கடற்கரையில் நடமாட போலீஸாா் யாரையும் அனுமதிக்காததால் அப்பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.

காவல்துறை ஏ.எஸ்.பி. சந்தரவதனம், ஆய்வாளா் வடிவேல் முருகன் ஆகியோா் தலைமையில் கடற்கரையில் போலீஸாா் மற்றும் கடலோரக் காவல் படையினா் தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டனா். கடற்கரைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளை வர விடாமல் தடுத்து போலீஸாா் எச்சரித்து அனுப்பியதால் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com