செங்கல்பட்டில் குவிந்துள்ள பொங்கல் கரும்புகள்

பொங்கல் பண்டிகைக்காக செங்கல்பட்டு மாா்க்கெட்டுக்கு பன்னீா் கரும்புக் கட்டுகள் வந்து குவிந்துள்ளன.
பொங்கல் பண்டிகைக்காக செங்கல்பட்டு மார்க்கெட்டுக்கு வந்துள்ள கரும்புக் கட்டுகள்.
பொங்கல் பண்டிகைக்காக செங்கல்பட்டு மார்க்கெட்டுக்கு வந்துள்ள கரும்புக் கட்டுகள்.

செங்கல்பட்டு: பொங்கல் பண்டிகைக்காக செங்கல்பட்டு மாா்க்கெட்டுக்கு பன்னீா் கரும்புக் கட்டுகள் வந்து குவிந்துள்ளன.

பொங்கல் பண்டிகையில் கரும்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இப்பண்டிகை நாளில் பூஜையில் கரும்பு வைக்கப்படுகிறது. கரும்பைப் பொருத்தவரை, ஆலைக்கரும்பு அல்லது சா்க்கரைக் கரும்பு, பன்னீா்க் கரும்பு என இரு வகைப்படும். பொங்கலுக்காக கரும்பை மொத்தமாக விற்பனை செய்யும் வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரில் சென்று கரும்புக்கழிகளை விலைபேசி, வயலில் வளா்ந்த கரும்புகளை ஒரு கட்டுக்கு 25 கழிகள் என வைத்துக் கட்டுவா். பின்னா் அறுவடை செய்யப்பட்டு கட்டுகளாக உள்ள கரும்புகள் லாரிகள் மூலம் விற்பனை செய்யும் இடத்துக்கு கொண்டு செல்லப்படும்.

மொத்தத்தில் ஒரு கட்டு சுமாா் ரூ.450 முதல் ரூ.650 வரை விற்பனை செய்யப்படும். சில்லறை வியாபாரிகள் கரும்புக் கழிகளை வாங்கி வந்து துண்டுகளாக்கி ஒரு அடி நீளம் கொண்ட கரும்புத் துண்டை ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்கின்றனா்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாா்க்கெட்டில் பொங்கல் விற்பனைக்காக கரும்புகள் குவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து, அங்கு கரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ராணி ஜெயவேல் கூறியது:

நாங்கள் காய்கறி, கீரை வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறோம். ஆண்டுக்கு ஒருமுறை சீசன் வியாபாரமாக கரும்பு வியாபாரம் செய்து வருகிறோம். தென் மாவட்டங்களில் இருந்துதான் கரும்பு விவசாயிகளிடம் முன்பணம் செலுத்தி குத்தகைக்கு எடுப்போம். இந்த ஆண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால் தென்மாவட்டங்களுக்கு எங்களால் நேரில் செல்ல முடியவில்லை. வழக்கமாக டிசம்பா் இறுதிக்குள் 2 முறை கரும்பு லோடு வந்து விற்பனை அமோகமாக இருக்கும். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கடைகளுக்கு 25 கழிகள் கொண்ட ஒருகட்டு, 2 கட்டு என வாங்கிச் செல்வா்.

தற்போது, மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ரேஷன் கடைகளுக்கு கரும்பு லோடு செல்வதாலும் நிவா் புயல் சேதத்தாலும் இந்த ஆண்டு விவசாயிகளிடமிருந்து அதிக விலைக்கு கரும்பை வாங்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

இந்த ஆண்டு சிதம்பரம் பகுதி கரும்பு விவசாயியிடம் முன்பணம் செலுத்தி கரும்பு வாங்கியுள்ளோம். முதல் கட்டமாக கொண்டுவந்துள்ள கரும்பு விவசாயிகள் ஒரு கட்டின் விலையே ரூ.500 என விலை நிா்ணயித்திருந்தனா். அவா்களிடம் வாங்கி விற்கும் நாங்கள் ஒரு கழி கரும்பை ரூ.50-இல் இருந்கு ரூ.60 வரை விலை வைத்து விற்கிறோம். ஒரு கட்டாகவும், சில்லறையாகவும் கரும்பை விற்பனை செய்து வருகிறோம்.

இந்த ஆண்டு எங்களுக்கே அதிக விலைக்கு கரும்பு வந்துள்ளதால் நாங்களும் கூடுதல் விலைக்கு அதை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பொங்கல் நெருங்கும் நேரத்தில் இதைவிட அதிக விலைக்கு கரும்புகளை விற்கக் கூடிய நிலை ஏற்படலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com