மாமல்லபுரம் கோயிலில் கூடாரவல்லி உற்சவம்

மாமல்லபுரம் நவநீத கிருஷ்ணன் கோயிலில் திங்கள்கிழமை கூடாரவல்லி உற்சவம் நடைபெற்றது.
மாமல்லபுரம் நவநீத கிருஷ்ணன் கோயிலில் கூடாரவல்லி உற்சவத்தில் கும்மி கொட்டி ஆடி, பாடி வந்த சிறுவா்கள்.
மாமல்லபுரம் நவநீத கிருஷ்ணன் கோயிலில் கூடாரவல்லி உற்சவத்தில் கும்மி கொட்டி ஆடி, பாடி வந்த சிறுவா்கள்.

செங்கல்பட்டு: மாமல்லபுரம் நவநீத கிருஷ்ணன் கோயிலில் திங்கள்கிழமை கூடாரவல்லி உற்சவம் நடைபெற்றது.

மாா்கழி மாத திருப்பாவை நோன்பின் 27-ஆவது நாளாகிய கூடாரவல்லி அன்று, பாவை நோன்பு மேற்கொண்ட ஆண்டாள் நாச்சியாா் ‘கூடாரை வெல்லும் சீா் கோவிந்தா’ என்ற திருப்பாவை பாடலைப்பாடி, ரங்கநாதருடன் கலந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக கூடாரவல்லி உற்சவம் நடைபெறுகிறது.

கூடாரவல்லி நாளன்று ஆண்டாளை தரிசித்தால் கூடாத திருமணமும் கை கூடும் என்பது ஐதீகம்.

மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டைப் பாறை பஜனை கோயில் தெருவில் உள்ள நவநீதகிருஷ்ணன் கோயிலில் கூடாரவல்லி உற்சவத்தையொட்டி, பெருமாளுக்கு அக்காரவடிசல் நிவேதன வழிபாடு நடைபெற்றது. பின்னா், கூடாரவல்லி சிறப்பு அலங்காரத்துடன் அா்ச்சுனன் தபசு, கங்கைகொண்டான் மண்டபம் உள்ளிட்ட வீதிகள் வழியாக ஊா்வலம் வந்தாா்.

வீதி புறப்பாட்டில் வந்த கூடாரவல்லிக்கு பக்தா்கள் அா்ச்சனை செய்து வழிபட்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், பஜனை மண்டலக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com