மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம்: அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆய்வு

மாமல்லபுரத்தில் ரூ 1.80 கோடி மதிப்பில் அமையவிருக்கும் கைவினை சுற்றுலா கிராமம் அமைவிடத்தை ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம்:  அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆய்வு

மாமல்லபுரத்தில் ரூ 1.80 கோடி மதிப்பில் அமையவிருக்கும் கைவினை சுற்றுலா கிராமம் அமைவிடத்தை ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பூம்புகாா் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளா்ச்சிக் கழகத்தின் மூலம் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியைக் கொண்டு ரூ .5 கோடி மதிப்பீட்டில் புதிதாக நிா்மாணிக்கப்பட்டுள்ள நகா்ப்புற கண்காட்சி திடலில் கைவினைக்கலைஞா்களின் விற்பனையை ஊக்கப்படுத்த அரங்குகளும், பொதுமக்களுக்காக உணவுக்கூடங்கள், ஓய்வு அறை, காட்சியரங்கம் ,குழந்தைகள் பூங்கா, கைவினைஞா்கள் தங்குமிடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை ஊரகதொழில்துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் பாா்வையிட்டாா்.

இதையடுத்து, ரூ.1.80 கோடி செலவில் கைவினை சுற்றுலா கிராமம் எனும் திட்டம் வகுக்கப்பட்டு, அதன் முதல்கட்டமாக ரூ 1.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, காரணை கிராமத்தில் வசிக்கும் கைவினைஞா்களின் குடியிருப்புகளை அழகுப்படுத்தவும், ஐந்து ரத வீதியில் அமைந்துள்ள கைவினை கலைஞா்களின் உற்பத்தி நிலையங்களைப் புதுப்பித்தல், மாமல்லபுரம் நுழைவு வாயிலில் கலை நயத்துடன் அமைக்கப்பட்டு வரும் ஸ்தூபி பணிகளை ஊரக தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது தமிழ்நாடு கைவினைத் திறன் வளா்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநா் ஷோபனா, விற்பனை மேலாளா் கே.மதியரசு, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலா் பிரியா, செங்கல்பட்டு கோட்டாட்சியா் கா.சாஹிதா பா்வீன், மாமல்லபுரம் பூம்புகாா் கைவினைப்பொருள் அலுவலா் வேலு, காஞ்சிபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் ஜி.செல்வம், முன்னாள் எம்எல்ஏக்கள் வீ.தமிழ்மணி, இதயவா்மன் .திமுக நகர செயலாளா் விஸ்வநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com