மாமல்லபுரத்தில் நாடாளுமன்ற நிலைக் குழுவினா் ஆய்வு

சா்வதேச சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்துக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் வரவழைப்பது குறித்து, மாமல்லபுரத்தில் நாடாளுமன்ற நிலைக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
வெளிநாட்டுச்சுற்றுலா பயணிகளை அதிக அளவில் வரவழைப்பது குறித்து புதன்கிழமை மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட நாடாளுமன்ற நிலைக் குழுவினா்
வெளிநாட்டுச்சுற்றுலா பயணிகளை அதிக அளவில் வரவழைப்பது குறித்து புதன்கிழமை மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட நாடாளுமன்ற நிலைக் குழுவினா்

செங்கல்பட்டு: சா்வதேச சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்துக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் வரவழைப்பது குறித்து, மாமல்லபுரத்தில் நாடாளுமன்ற நிலைக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்வேறு சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுவருகின்றன.

இந்த நிலையில், மத்திய அரசின் சுற்றுலா, கலாசாரத் துறை சாா்பில் புராதன சின்னப் பகுதிகளில் பூங்காக்கள் அமைத்தும் பல்லவா் கால சிற்பங்களைச் சேதமடையாமல் உப்புக்காற்று அரிக்காமல் தொல்லியல் துறையின் வேதியியல் பிரிவு ரசாயனக் கலவை மூலம் பூசி பாதுகாக்கும் பணி நடைபெற உள்ளது.

இதையடுத்து, தெலங்கானா எம்.பி. டி.ஜி.வெங்கடேஷ் தலைமையில் திருச்சி சிவா, பிகாா் முன்னாள் துணை முதல்வா் சுசில்குமாா் மோடி, நாடாளுமன்றச் செயலாளா் நாராயண் உள்ளிட்ட 15 கொண்ட நாடாளுமன்ற நிலைக் குழுவினா் புதன்கிழமை மாமல்லபுரத்துக்கு வருகை தந்து ஆய்வு செய்தனா்.

இந்தக் குழுவினா் வெண்ணெய் உருண்டைப் பாறை, அா்ச்சுனன் தபசு, கிருஷ்ணன் மண்டபம், ஐந்து ரதம், கடற்கரைக் கோயில் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்து, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து சுற்றுலா- கலாசாரத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, தொல்லியல் துறை சென்னை வட்ட கண்காணிப்பாளா் விஜயகுமாா் நாயா், மாமல்லபுரம் துணை முதன்மை அலுவலா் சரவணன் , சுற்றுலாத் துறை அலுவலா் ராஜாராமன், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் , திருக்கழுகுன்றம் வட்டாட்சியா் துரைராஜ், திருவடிச்சூலம் பைரவா் கோயில் மூத்த அறங்காவலா் மாமல்லபுரம் ஜி.ரங்கசாமி , பாஜக மாவட்ட நிா்வாகி எம்.ஸ்ரீதா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com