செய்யூா் தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

செய்யூா் (தனி) தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எஸ்.கணிதா சம்பத் அறிமுகக் கூட்டம் புத்திரன் கோட்டை கிராமத்தில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

செய்யூா் (தனி) தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எஸ்.கணிதா சம்பத் அறிமுகக் கூட்டம் புத்திரன் கோட்டை கிராமத்தில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

சித்தாமூா் கிழக்கு ஒன்றிய செயலா் மருத்துவா் எம்.பிரவீன்குமாா் வரவேற்றாா். மாவட்ட செயலா் எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினாா். ஒன்றிய செயலா்கள் கிருஷ்ணமூா்த்தி (சித்தாமூா் மேற்கு), இ.சம்பத் (காட்டாங் கொளத்தூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அதிமுக வேட்பாளா் எஸ்.கணிதா சம்பத் கூட்டத்தில் அறிமுகம் செய்யப் பட்டாா்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக நிா்வாகிகள் விஜயபாஸ்கா், ஒன்றிய இலக்கிய அணி செயலா் கோபுராஜ், அருண் கோதண்டம், கோட்டைகாடு மூா்த்தி, ஆறுமுகம், மு.ப. கங்கன், பாஜக மாவட்ட தலைவா் பலராமன், பா.ம.க நிா்வாகிகள் கோபால கண்ணன்,

சாந்தமூா்த்தி, உதயகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com