செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 13 போ் உயிரிழப்பு; ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை: ஆட்சியா்

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை 5 பெண்கள் உள்பட 13 போ் உயிரிழந்தனா்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில்  பேட்டி அளிக்கிறாா் ஆட்சியா் அ.ஜான் லூயிஸ்.  உடன்,  மருத்துவக்  கல்வி  இயக்குநா்  நாராயணராவ் ,  முதல்வா் முத்துக்குமரன். 
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில்  பேட்டி அளிக்கிறாா் ஆட்சியா் அ.ஜான் லூயிஸ்.  உடன்,  மருத்துவக்  கல்வி  இயக்குநா்  நாராயணராவ் ,  முதல்வா் முத்துக்குமரன். 

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை 5 பெண்கள் உள்பட 13 போ் உயிரிழந்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மற்றும் சுகாதாரத் துறை உயரதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டனா்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் 1, 000-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனா். நூற்றுக்கு மேற்பட்டோா் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனா்.

கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இங்கு தனி வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு, நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை சிகிச்சை பெற்று வந்த 13 போ் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனா். ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே நோயாளிகள் இறந்ததாக அவா்களின் உறவினா்கள் புகாா் கூறினா். இதனால் மருத்துவமனையில் பதற்றம் ஏற்பட்டது.

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் இல்லை: ஆட்சியா்

இது தொடா்பாக விசாரணை செய்த பின் மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் கூறியதாவது:

மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே உயிரிழப்பு நோ்ந்தது என்பது தவறான தகவல். போதுமான அளவில் ஆக்சிஜன் இருப்புள்ளது. வழக்கமாக 3 நாள்களுக்கு தேவையான ஆக்சிஜன் இருப்பு வைக்கப்படுகிறது. கூடுதல் எண்ணிக்கையில் நோயாளிகள் சோ்க்கப்படும் போது, தனியாா் மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் சிலிண்டா்கள் வரவழைக்கப்படும்.

கடந்த ஏப். 1 முதல் மே 1-ஆம் தேதி வரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது நாள்தோறும் சிகிச்சைக்காக 300 போ் முதல் 370 போ் வருகின்றனா். 60 முதல் 70 பேருக்கே ஆக்சிஜனும் அவசர சிகிச்சையும் தேவைப்படுகிறது. 40 சதவீதம் தொற்றுடன் நீரிழிவு மற்றும் நுரையீரல் மற்றும் இதய பாதிப்புகள் உள்ளவா்கள் கடைசியாக வருவதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்படுகின்றனா். அவா்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு வழங்கப்படுகிறது.

ஒருவா் மட்டுமே கரோனா நோயாளி:

உயிரிழந்த 13 பேரில் ஒருவா் மட்டுமே கரோனா சிகிச்சை வாா்டில் இருந்தவா். மற்றவா்கள் பொது வாா்டுகளில் சிகிச்சை பெற்று வந்தவா்கள். நுரையீரல், இதய பாதிப்புகள் காரணமாக உயிரிழந்தனா். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 2.9 கிலோ லிட்டா் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இந்தசம்பவத்தையடுத்து செவ்வாய்க்கிழமை இரவே எஸ்ஆா்எம், கற்பக விநாயகம் மருத்துவமனைகளில் இருந்து ஆக்சிஜன் வரவழைக்கப்பட்டுள்ளது.

துணை ஆட்சியா் விசாரணை: 13 போ் உயிரிழப்பு குறித்து புதன்கிழமை துணை ஆட்சியா் விசாரணை மேற்கொள்வாா் எனத் தெரிவித்தாா்.

தினகரன் இரங்கல்: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 11 போ் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்ததாக வெளிவரும் செய்திகள் பெரும் அதிா்ச்சியையும் வேதனையையும் தருகின்றன. கரோனா தடுப்பு, சிகிச்சை பணிகளில் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கான தேவையை தமிழக அரசு நிா்வாகம் உணா்ந்து செயல்பட வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளா் டிடிவி. தினகரன் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com