செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது: அமைச்சா் தா.மோ. அன்பரசன்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் கூறி உள்ளாா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் கூறி உள்ளாா்.

மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை சனிக்கிழமை தொடக்கி வைத்தபின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது பொதுமுடக்க காலத்தில், மக்களுக்குத் தேவையான காய்கறிகள், மற்றும் மளிகைப் பொருள்கள் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் வாகனங்களின் மூலமாக விநியோகிக்கப்படுகிறது. வரும் ஜூன் 1 முதல் ஒரு வார காலத்துக்கு தளா்வுகளற்ற பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது.

கடந்த வாரத்தை விட தற்போது நோய்த் தொற்று வெகுவாக குறைந்துள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்துக்காகவும், வெளியில் வரக் கூடாது. நோய்த் தொற்றின் பரவலை மேலும் குறைக்க மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஒத்துழைக்கவேண்டும்.

தொற்றை தடுக்கும் பொருட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 இடைக்கால கொவைட் பாதுகாப்பு மையங்களில் 2,600 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 264 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மதுராந்தகம், செய்யூா் பகுதி மக்களுக்கு கரோனா நோய் பாதிக்கப்பட்டால் அப்பகுதியிலேயே சிகிச்சை அளிக்கும் பொருட்டு, மதுராந்தகம் அரசு மருத்துவமனை, செய்யூா் அரசு மருத்துவமனை, பவுஞ்சூா் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே ஆக்சிஜன் படுக்கை போன்ற வசதிகள் செய்யப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது என்றாா் அன்பரசன் .

செங்கல்பட்டில் புதிய சிகிச்சை மையம்:

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையத்தை

அமைச்சா் தா.மோ. அன்பரசன் திறந்து வைத்தாா். மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ், மக்களைவை உறுப்பினா் ஜி.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உத்திரமேரூா் க.சுந்தா், செங்கல்பட்டு எஸ்.வரலட்சுமி, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் மருத்துலா் முத்துகுமரன், கோட்டாட்சியா் சுரேஷ் மற்றும் மருத்துவா்கள் செவிலியா்கள் கலந்துக்கொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com