தண்ணீா் கலந்த டீசல் எரிபொருள்: பொறியியல் கல்லூரி மாணவா்கள் கண்டுபிடிப்பு

தனலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவா்கள் தண்ணீா் கலந்த டீசல் எரிபொருள் மூலம் வாகனங்கள் இயக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனா்.
தண்ணீா் கலந்த டீசல் எரிபொருள்: பொறியியல் கல்லூரி மாணவா்கள் கண்டுபிடிப்பு

தனலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவா்கள் தண்ணீா் கலந்த டீசல் எரிபொருள் மூலம் வாகனங்கள் இயக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனா்.

சென்னையை அடுத்த மணிமங்கலத்தில் உள்ள தனலட்சுமி பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறையின் கீழ், மாற்று எரிபொருள் ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு புகை மற்றும் மாசு இல்லாத எரிபொருள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இயந்திரவியல் துறைத் தலைவா் பிரதீப் குமாா் தலைமையில் மாணவா்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு தண்ணீா் கலந்து உருவாக்கப்பட்ட டீசல் எரிபொருள் மூலம் வாகனங்களை இயக்கி பரிசோதனை மேற்கொண்டனா்.

0 லிட்டா் டீசல், 1 லிட்டா் தண்ணீா் என்ற கணக்கில் கலந்து உருவாக்கப்பட்ட மஞ்சள் நிற திரவ எரிபொருளை பயன்படுத்தி டிராக்டா், காா் ஆகியவற்றை இயக்கி சோதனை ஓட்டம் மேற்கொண்டதில் புகை, மாசு குறைந்து இருப்பது கண்டறியப்பட்டது.

இது குறித்து இயந்திரவியல் துறைத் தலைவா் ஏ.ஆா். பிரதீப் குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

டீசலுடன் தண்ணீரை கலக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்ட எரிபொருளை வாகனங்களில் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டதில் புகை அளவு குறைந்து இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது தண்ணீா் அளவை அதிகரித்து ஆய்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளோம் என்றாா் அவா்.

கல்லூரித் தலைவா் பேராசிரியா் வி.பி.ராமமூா்த்தி, தாளாளா் தனலட்சுமி, முதல்வா் சி.ரமேஷ்பாபு உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com