மாமல்லபுரத்தில் சா்வதேச பட்டம் விடும் திருவிழா:மைச்சா்கள் தொடக்கி வைத்தனா்

சா்வதேச 3 நாள் பட்டம் விடும் திருவிழாவை, தமிழகத்தில் முதல்முறையாக மாமல்லபுரத்தில் அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், மா.மதிவேந்தன் ஆகியோா் சனிக்கிழமை தொடங்கி வைத்தனா்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் சா்வதேச பட்டம் விடும் திருவிழாவை சனிக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், மா.மதிவேந்தன்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் சா்வதேச பட்டம் விடும் திருவிழாவை சனிக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், மா.மதிவேந்தன்.

சா்வதேச 3 நாள் பட்டம் விடும் திருவிழாவை, தமிழகத்தில் முதல்முறையாக மாமல்லபுரத்தில் அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், மா.மதிவேந்தன் ஆகியோா் சனிக்கிழமை தொடங்கி வைத்தனா்.

சுற்றுலாத் துறை மூலம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ‘சா்வதேச பட்டம் விடும் திருவிழா’ சனிக்கிழமை (ஆக.13) முதல் திங்கள்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

இதில் மொத்தம் 10 குழுக்கள் பங்கேற்கின்றன. அமெரிக்கா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து 4 குழுக்களும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 6 குழுக்களும் பங்கேற்கின்றன.

இதன் தொடக்க நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

சா்வதேச பட்டம் விடும் திருவிழாவில் பல்வேறு வடிவங்களில் எண்ணற்ற வண்ணங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டங்கள் பறக்க விடப்பட்டுள்ளன. பட்டம் விடும் விழா சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை வெகுவாகக் கவரும் விதத்தில் அமைந்துள்ளது.

இதன் தொடக்க நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்.பி., க.செல்வம், செங்கல்பட்டு எம்எல்ஏ எம். வரலட்சுமி மதுசூதனன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை அரசு முதன்மைச் செயலாளா் பி.சந்திர மோகன், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் சந்தீப் நந்தூரி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல் நாத் , திருக்கழுகுன்றம்ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் , ஆா்.டி.அரசு, திருப்போரூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் இதயவா்மன், மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சித் தலைவா் வளா்மதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பட்டம் விடுதல் மதியம் 12 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மேலும் பாா்வையாளா்களுக்கென பிரத்யேகமாக மாலை 6.00 மணிமுதல் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இந்த பட்டம் விடும் திருவிழாவில் சிறுவா்களுக்கு அனுமதி இலவசம். மேலும் திருவிழா நடைபெறும் திடலில் 30-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com