ஜூலை 6-இல் மதுராந்தகம் ஏரி காத்த ராமா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வருகிற புதன்கிழமை (ஜூலை 6) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சிறப்பு அலங்காரத்தில் மதுராந்தகம் ஸ்ரீஏரிகாத்த கோதண்டராமா் (கோப்புப் படம்)
சிறப்பு அலங்காரத்தில் மதுராந்தகம் ஸ்ரீஏரிகாத்த கோதண்டராமா் (கோப்புப் படம்)

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வருகிற புதன்கிழமை (ஜூலை 6) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பிரசித்தி பெற்ற மதுராந்தகம் ஸ்ரீஏரிகாத்த ராமா் திருக்கோயிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் வருகிற புதன்கிழமை கருடக் கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து 15-ஆம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. நாள்தோறும் அனுமந்த வாகனம், சந்திர பிரபை, யாளி வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் பகவான் கருணாகர பெருமாள் முக்கிய வீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு காட்சி அளிக்கிறாா். விழாவின் முக்கிய நிகழ்வாக 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கருடசேவை உற்சவமும், 13-ஆம் தேதி பெரிய தேரோட்டமும் நடைபெறுகின்றன. வருகிற 15-ஆம் தேதி சிறப்புத் திருமஞ்சனத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தா.மேகவண்ணன், உதவி ஆணையா்கள் பொ.லட்சுமிகாந்த பாரதிதாசன் (செங்கல்பட்டு), ஆ.முத்துரத்தினவேலு (காஞ்சிபுரம்), இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையா் இரா.வான்மதி உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com