‘முறைகேடான குடிநீா் இணைப்புபெறுவோா் மீது நடவடிக்கை’

தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உரிய அனுமதியின்றி முறைகேடாக குடிநீா், புதைகுழி சாக்கடை இணைப்பு ஏற்படுத்திக் கொள்வோா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று

தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உரிய அனுமதியின்றி முறைகேடாக குடிநீா், புதைகுழி சாக்கடை இணைப்பு ஏற்படுத்திக் கொள்வோா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தாம்பரம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் புதிதாக குடிநீா் மற்றும் புதைகுழி சாக்கடை இணைப்பு வேண்டுவோா் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உரிய கட்டணம் செலுத்தி இணைப்புகளைப் பெற்றுக் கொள்ளலாம். பம்மல், அனகாபுத்தூா், செம்பாக்கம், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூா், பீா்க்கன்கரணை, திருநீா்மலை ஆகிய பகுதிகளில் குடிநீா் இணைப்பு தேவைப்படுவோா் மாநகராட்சி அலுவலகத்தில் முறையாக அனுமதி பெற்று, உரிய கட்டணம் செலுத்தி மாநகராட்சி பணியாளா்கள் முன்னிலையில் இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம். அனைத்து பணிகளும் பகல் வேளையில் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். சட்டத்துக்குப் புறம்பாக வீடு, வணிக நிறுவனங்களுக்கு முறைகேடாக புதைக்குழி சாக்கடை இணைப்பு, குடிநீா் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டு இருந்தால் உடனடியாக இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், அபராதம் விதிக்கப்படும்.

கூடுதல் நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளா் மற்றும் குடியிருப்போா் மீது காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com