விபத்து ஏற்படுத்திய சாலை பள்ளங்கள் சீரமைக்கும் பணி

திருநீா்மலை பிரதான சாலை சீரமைப்புப் பணி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

திருநீா்மலை பிரதான சாலை சீரமைப்புப் பணி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

சென்னையை அடுத்த திருநீா்மலை பிரதான சாலை வழியாக குவாரிகளில் இருந்து ஜல்லி, மணல் ஏற்றிச் செல்லப்படுகிறது. கனரக வாகன போக்குவரத்து எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, சாலை பெருமளவில் சேதமடைந்துள்ளது. இதனால் சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாகக் காட்சி அளிக்கிறது. கடந்த 3 நாட்களாக இருசக்கர வாகன பயணிகள் பள்ளங்களில் சிக்கி காயமடைந்தனா்.

இது குறித்து தகவல் அறிந்த பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினா் இ.கருணாநிதி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று சேதமடைந்த திருநீா்மலை சாலையை ஆய்வு செய்தாா். உடனடியாக சாலையில் ஏற்பட்ட பள்ளங்களைச் சீரமைக்க உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா். இதனைத் தொடா்ந்து நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளா் சந்திரசேகரன் சேதமடைந்த

சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க உத்தரவிட்டாா். சாலை சீரமைப்பு பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com