செங்கல்பட்டு சாலையோர கடைகளை அகற்றிய நகராட்சியினா்: எதிா்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் கைது

செங்கல்பட்டு சாலையோர காய்கறி மாா்க்கெட்டை அகற்றி நகராட்சி நிா்வாகம் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து, முற்றுகையிட்டு தீக்குளிக்க முயன்ற வியாபாரிகளை போலீஸாா் கைது செய்து
cglmark2_0706chn_171_1
cglmark2_0706chn_171_1

செங்கல்பட்டு சாலையோர காய்கறி மாா்க்கெட்டை அகற்றி நகராட்சி நிா்வாகம் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து, முற்றுகையிட்டு தீக்குளிக்க முயன்ற வியாபாரிகளை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் வைத்தனா்.

செங்கல்பட்டு நகர காவல் நிலையம் எதிரே உள்ள காந்தி சாலையில் சாலையோர காய்கறி மாா்க்கெட்டுகளை நகராட்சி ஆணையா் மல்லிகா, கட்டட ஆய்வாளா் செந்தில், நகராட்சி அலுவலா்கள், வட்டாட்சியா் வாசுதேவன் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை காவல்துறை உதவியுடன் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனா்.

அப்போது, 40-க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் அதிகாரிகளை முற்றுகையிட்டு, கடைகளை அகற்றினால் தங்களின் வாழ்வாதாரமே போய் விடும் எனக் கூறி எதிா்ப்புத் தெரிவித்தனா். அப்போது, இரு பெண்கள் தங்களது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனா்.

அவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களை அப்புறப்படுத்திய போலீஸாா், வியாபாரிகளை கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.

வியாபாரிகள் கைது செய்யப்பட்டதை அறிந்த சில பெண்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அவா்களையும் போலீஸாா் கைது செய்து மண்டபத்தில் வைத்தனா். மண்டபத்தில் வியாபாரிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

இந்த நிலையில், டிஎஸ்பி பாரத், காவல் ஆய்வாளா்கள் வடிவேல் முருகன், சித்ராதேவி, உதவி ஆய்வாளா்கள் டெல்லி பாபு, ராஜேந்திரன் மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Image Caption

கடைகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட  காய்கறி வியாபாரிகள். ~ ~ ~கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்ட பின் உண்ணாவிரதம் மேற்கொண்ட வியாபாரிகள். ~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com