திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் அறுபத்து மூவர் விழா
By DIN | Published On : 07th May 2022 11:32 AM | Last Updated : 07th May 2022 11:44 AM | அ+அ அ- |

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் சித்திரைப் பெருவிழாவையொட்டி 3ஆம் நாள் சனிக்கிழமை வெள்ளி அதிகார நந்தி கிரி பிரதக்ஷணம் மற்றும் 63 நாயன்மார்கள் உற்சவ ஊர்வலம் வெகுசிறப்பாக விழா நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் மலைக்கோயில், பக்தவத்சலேஸ்வரர் தாழக் கோயிலில் 1800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில் உள்ளது. பட்சி தீர்த்தம் கழுதொழும் சிவனாக வீற்றிருக்கும் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைப் பெருவிழா கடந்த மே 5ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 15ந்தேதி வரை நடைபெறுகிறது .
இவ்விழாவின் 3 ஆம் நாள் உற்சவமாக சாமி மற்றும் 63 நாயன்மார்கள் உற்சவ மூர்த்திகள் பக்தவத்சலேஸ்வரர் தாளக் கோயிலில் இருந்து புறப்பட்டு வேதகிரீஸ்வரர் மலைகிரி பிரதக்ஷண ஊர்வலம் நடைபெற்றது.
இவ்விழாவையொட்டி சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. 63 நாயன்மார்கள் உற்சவ விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்தனர். வழிநெடுகிலும் ஆன்மீக பக்தர்கள் அன்னதானங்கள், குளிர்பானங்கள், தண்ணீர் என வழங்கினர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன், பாரதி தாசன் , செயல் அலுவலர் மேகவண்ணன் , தக்கார் மற்றும் செயல் அலுவலர் வெங்கடேசன், மேலாளர் விஜி கோயில் சிவாச்சாரியார்கள், பணியாளர்கள் உற்சவ உபயதாரர்கள் மற்றும் நகர பொதுமக்கள் செய்து வருகின்றனர்.