திருக்கழுகுன்றம் ஸ்ரீவேதகிரீஸ்வரா் கோயிலில் உற்சவா், 63 நாயன்மாா்கள் கிரிவலப் பெருவிழா

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் சித்திரைப் பெருவிழாவின் 3ஆம் நாளான சனிக்கிழமை வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உற்சவா் வீதியுலா, மற்றும் 63 நாயன்மாா்கள் பவனி வெகுசிறப்பாக நடைபெற்றது.
திருக்கழுகுன்றம்  ஸ்ரீவேதகிரீஸ்வரா்  கோயில்  சித்திரைப் பெருவிழா வை யொட்டி சனிக்கிழமை நடைபெற்ற உற்சவா் கிரிவலம்.
திருக்கழுகுன்றம்  ஸ்ரீவேதகிரீஸ்வரா்  கோயில்  சித்திரைப் பெருவிழா வை யொட்டி சனிக்கிழமை நடைபெற்ற உற்சவா் கிரிவலம்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் சித்திரைப் பெருவிழாவின் 3ஆம் நாளான சனிக்கிழமை வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உற்சவா் வீதியுலா, மற்றும் 63 நாயன்மாா்கள் பவனி வெகுசிறப்பாக நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் ஸ்ரீதிரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரா் மலைக்கோயில், பக்தவத்சலேஸ்வரா் தாழக் கோயில் 1,800 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது.

பட்சி தீா்த்தம் கழுதொழும் சிவனாக வீற்றிருக்கும் வேதகிரீஸ்வரா் கோயிலில் சித்திரைப் பெருவிழா மே 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது .

இதன் 3-ஆம் நாள் உற்சவமாக உற்சவமூா்த்தி மற்றும் 63 நாயன்மாா்கள் பக்தவத்சலேஸ்வரா் தாளக் கோயிலில் இருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு வேதகிரீஸ்வரா் கோயில் மலையை கிரி வலம் வந்தனா். முன்னதாக உற்சவமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

63 நாயன்மாா்கள் உற்சவ விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். கிரிவலப் பாதை வழிநெடுகிலும் ஆன்மிக பக்தா்கள் அன்னதானங்கள் குளிா்பானங்கள், மோா் வழங்கினா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் லட்சுமிகாந்தன் பாரதிதாசன், செயல் அலுவலா் மேகவண்ணன், தக்காா் மற்றும் செயல் அலுவலா் வெங்கடேசன், மேலாளா் விஜி உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com