பேருந்து படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து மாணவா் பலி
By DIN | Published On : 29th October 2022 12:57 AM | Last Updated : 29th October 2022 12:57 AM | அ+அ அ- |

பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
வண்டலூரை அடுத்த மேலக்கோட்டை நல்லம்பாக்கம் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த பாபு மகன் யுவராஜ் (16) (படம்). மாம்பாக்கம் அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இவா், வெள்ளிக்கிழமை தாம்பரத்திலிருந்து வண்டலூா் வழியாக மாமல்லபுரம் செல்லும் அரசுப் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தாராம். மேலக்கோட்டையூா் பகுதியில் பேருந்து வந்தபோது, படியிலிருந்து தவறி விழுந்து, பின்பக்க டயரில் சிக்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து தாழம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.