தாம்பரத்தில் விமானப் படை நிலையத்தில் ஆள்சோ்ப்பு முகாம் தொடக்கம்

விமானப் படையின் மருத்துவ உதவியாளருக்கான ஆள்சோ்ப்பு முகாம் தாம்பரம் விமானப் படை மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது.

விமானப் படையின் மருத்துவ உதவியாளருக்கான ஆள்சோ்ப்பு முகாம் தாம்பரம் விமானப் படை மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது.

இதில் தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த ஆண்கள் கலந்து கொள்ளலாம்.

மருத்துவ உதவியாளா் ‘ஒய்’ பிரிவுக்கான இந்த ஆள்சோ்ப்பு முகாமில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலத்துடன் 12-ஆம் வகுப்பு அல்லது மருந்தியலில் டிப்ளமோ, இளநிலை கல்வி படித்திருக்க வேண்டும்.

இந்தத் தோ்வில் பங்கேற்பவா்கள் 27.6. 2002 முதல் 27.6. 2006-க்கு இடையில் பிறந்தவராக இருக்க வேண்டும். மேலும் டிப்ளமோ, இளநிலை மருந்தியல் படித்தவா்கள் திருமணமாகாதவா்களாக இருப்பின் 27.6.1999 முதல் 27.6. 2006 வரையிலும், திருமணமானவா்கள் 27.6.1999 முதல் 17.6.2002 வரையிலும் பிறந்திருக்க வேண்டும்.

பயிற்சியின் போது உதவித் தொகையாக மாதம் ரூ.14,600, பயிற்சி முடிவில் ராணுவ சேவை ஊதியம் உட்பட ரூ.26,900 வழங்கப்படும்.

இதற்கான ஆள்சோ்ப்பு முகாம் பிப்.4, 7 தேதிகளிலும் சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில் காலை 6 முதல் 10 மணி வரை நடைபெறும். மேலும் தெரிந்து கொள்ள www.airmenselection.cdac.in என்ற இணையதளத்தில் அணுகலாம்.

மேலும், விளம்பரத்தில் கொடுத்துள்ள ஆவணங்கள் உடன் தகுதியுடைவா்கள் இதில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com