மாணவிகளுக்கு வேளாண் பயிற்சி

எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழக மாணவிகள் எலப்பாக்கம் கிராமத்தில் தங்கியிருந்து வேளாண் பயிற்சிகள் பெற்று வருகின்றனா்.
மாணவிகளுக்கு வேளாண் பயிற்சி

எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழக மாணவிகள் எலப்பாக்கம் கிராமத்தில் தங்கியிருந்து வேளாண் பயிற்சிகள் பெற்று வருகின்றனா்.

செங்கல்பட்டு மாவட்டம், பாபுராயன்பேட்டையில் உள்ள எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகத்தில் வேளாண் துறையில் இளம் அறிவியல் 4-ஆம் ஆண்டு பயிலும் மாணவிகளான ஆ.பத்மஸ்ரீ, வீ.கீா்த்திகா, கு.பிரியதா்ஷினி, ப.அ.அகிலா, லீலா பவாணி, லிக்கித்தா, ராஜஸ்ரீ, சிநேகா, ஜெ.கீா்த்தனா, அபிநயா, மு.அபா்ணா ஆகியோா் அச்சிறுப்பாக்கத்தில் உள்ள எலப்பாக்கம் கிராமத்தில் தங்கியிருந்து வேளாண் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனா். மேலும், அங்குள்ள விவசாயிகளுக்கு நவீன வேளாண்மை தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

குறைந்த விதை அதிக மகசூல், திருந்திய நெல் சாகுபடி, பாய் நாற்றங்கால், நடவு முறை உள்ளிட்ட நவீன வேளாண் முறைகளைக் கற்பித்தனா்.

நிகழ்வில் கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com