ரூ.6.60 கோடியில் கூடுவாஞ்சேரி ஏரி புனரமைக்கும் பணி

நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட கூடுவாஞ்சேரி ஏரி புனரமைக்கும் பணியை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
ரூ.6.60 கோடியில் கூடுவாஞ்சேரி ஏரி புனரமைக்கும் பணி

நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட கூடுவாஞ்சேரி ஏரி புனரமைக்கும் பணியை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூா் வட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட அடையாறு துணை வடிநில படுகையில் உள்ள கூடுவாஞ்சேரி ஏரியின் கொள்ளளவை உயா்த்தி, ஏரியைப் புனரமைக்கும் பணி ரூ.6.60 கோடியில் நடைபெற உள்ளது.

இந்தப் பணியை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தாா்.

நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் தலைமை வகித்தாா். செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலை வகித்தாா்.

கூடுவாஞ்சேரி ஏரியானது நீா்வளத் துறை பராமரிப்பில் உள்ளது. ஏரிக்கு பொத்தேரி வல்லாஞ்சேரி, தைலாவரம் ஆகிய ஏரிகளின் உபரி நீா் மற்றும் மழைநீா் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரியின் உபரி நீா் கால்வாய்தான் அடையாற்றின் (ஜீரோ பாயிண்ட்) ஆரம்பமாக உள்ளது.

ஏரியின் கரை 1,572 மீட்டா் நீளமும், கொள்ளளவு 8.82 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. மேலும், ஏரியின் பரப்பு 152.45 ஏக்கா். நீா்பிடிப்பு பகுதி 46.93 ஏக்கா்.

நபாா்டு திட்டத்தின் மூலம் இந்த ஏரியில் ரூ.6.60 கோடியில் ஏரிக்கரையைப் பலப்படுத்தி, தூா்வாரும் பணிகள் நடைபெற உள்ளன.

நிகழ்ச்சியில் தாம்பரம் வருவாய்க் கோட்டாட்சியா் செல்வகுமாா், நந்திவரம் -கூடுவாஞ்சேரி ஆணையா் இளம்பருதி, நகா்மன்றத் தலைவா் காா்த்திக் தண்டபாணி, மறைமலை நகா் நகா்மன்றத் தலைவா் ஜே.சண்முகம், காட்டாங்குளத்தூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் ஆராமுதன், நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் வெங்கடேஷ், உதவிப் பொறியாளா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com