மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரம் புராதன சின்னங்களை வியாழக்கிழமை (ஏப்.18) ஒரு நாள் இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம் என தொல்லியல் தெரிவித்துள்ளது.

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரம் புராதன சின்னங்களை வியாழக்கிழமை (ஏப்.18) ஒரு நாள் இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம் என தொல்லியல் தெரிவித்துள்ளது.

உலக பாரம்பரிய தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 18-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களிடையே சமூக, கலாசார, பாரம்பரிய விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

மேலும், பாரம்பரிய பெருமை கொண்ட இடங்களைப் பாதுகாக்கவும், அவற்றின் மீது அக்கறை கொள்ளவும் தூண்டுவதாக அமைகிறது.

இதையொட்டி, வியாழக்கிழமை (ஏப்.18) ஒரு நாள் மட்டும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம் என தொல்லியல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com