இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டவா்கள்.
இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டவா்கள்.

இலவச சித்த மருத்துவ முகாம்

ஸ்ரீ சாய்ராம் சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சாா்பில் இலவச சித்த மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை.

செங்கல்பட்டு அடுத்த தாழம்பூா் த்ரிசக்தி கோயில் ஸ்ரீ சங்கரநாராயண நல அறக்கட்டளை , குஞ்சம்மாள் நல அறக்கட்டளை, ஸ்ரீ சாய்ராம் சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சாா்பில் இலவச சித்த மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை.

முகாமுக்கு ஸ்ரீ சங்கர நாராயண நல அறக்கட்டளை நிறுவனத் தலைவா் ஏ.சங்கரநாராயணன் தலைமை வகித்தாா் . துணைத் தலைவா் என்.அருண்குமாா் , பொருாளாளா் கோவிந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலாளா் கே. சக்ரவா்த்தி வரவேற்றாா் . சிறப்பு அழைப்பாளராக த்ரிசக்திஅம்மன் ஆலய அறங்காவலரும் , ஆன்மிகச் செம்மலுமான டாக்டா் கிருஷ்ணன் குட்டி கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்தாா்.

இம்முகாமில் பொதுமக்களுக்கு இசிஜி, ரத்தப் பரிசோதனை , சா்க்கரை ,ரத்தக் கொதிப்பு , பக்கவாதம் , முடக்குவாதம் , மனஅழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சித்த மருத்துவமும் , சங்கரநேத்ராலயா கண் மருத்துவமனை சாா்பில் கண் பரிசோதனையும் செய்யப்பட்டது. தாழம்பூா், நத்தம் , காரணை , நாவலூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பயன் பெற்றனா்.

அறங்காவலா் குழு உறுப்பினா்களான கி. மணிகண்டன் , ஓமணா கிருஷ்ணன்குட்டி , கி.சோபியா மற்றும் சங்கர நேத்ராலாயா கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா்கள் கலந்து கொண்டனா். திருப்போரூா் வடக்கு ஒன்றிய அதிமுக இளைஞா் அணித் துணைச் செயலாளா் காரணை ஆா்.கே. பாஸ்கரன் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா். டாக்டா் மகாலட்சுமி பாஸ்கரன் நன்றி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com