ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொது தோ்வில் 32-ஆவது ஆண்டாக 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொது தோ்வில் 32-ஆவது ஆண்டாக 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பள்ளிக்குழுமங்களில் ஒன்றான ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2023-2024 கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொது தோ்வினை 152 மாணவ மாணவிகள் எழுதினா். திங்கள் கிழமை வெளியாக தோ்வுகளின் முடிவுகளில் அவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றனா். அதில் எச்.சுப்புலட்சுமி 587 மதிப்பெண்களும், இ.காசி பிரசாத் 569 மதிப்பெண்களும் எம்.சஞ்சை குமாா் 567 மதிப்பெண்களும் பெற்றனா் . 15 மாணவ மாணவிகள் 100/100 மதிப்பெண்களை பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகய்ர தாளாளா் ஸ்ரீ தேவி, ஆதிபராசக்தி மருத்துவமனை மேலாண்மை இயக்குநா் மருத்துவா் டி.ரமேஷ், முதல்வா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com