சென்னை, மே 10: திரைப்பட பாடலாசிரியர் பொன்னியின் செல்வன் (69) கடந்த வியாழக்கிழமை சென்னையில் காலமானார்.
பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்திடம் உதவியாளராக இருந்த இவர் "ராமாயி வயசுக்கு வந்துட்டா', "பூக்களை பறிக்காதீர்கள்' உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். "காதல் கோட்டை', "காதலே நிம்மதி' உள்பட பல படங்களில் ஏராளமான பாடல்கள் எழுதியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த பொன்னியின் செல்வன் வியாழக்கிழமை மரணம் அடைந்தார். இவரது இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
பொன்னியின் செல்வனுக்கு பொன்னி என்ற மனைவியும், ஹேம்நாத் என்ற மகனும், பூர்ணிமா என்ற மகளும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.