‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காப்பீட்டு பிரீமியம் உயர்வு: வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி

ஆலங்குளம்,ஏப்.28:மத்திய அரசின் பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களும்,தனியார் காப்பீட்டு நிறுவனங்கள்,வாகனக் காப்பீட்டு பிரீமியத்தை உயர்த்தியுள்ளதால்,வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:08 am

வை. இராமச்சந்திரன்

ஆலங்குளம்,ஏப்.28:மத்திய அரசின் பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களும்,தனியார் காப்பீட்டு நிறுவனங்கள்,வாகனக் காப்பீட்டு பிரீமியத்தை உயர்த்தியுள்ளதால்,வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் காப்பீடு பிரீமியம் உயர்வால்,வாகன உரிமையாளர்கள் வாடகைக் கட்டணத்தை உயர்த்த எண்ணியுள்ளனர்.

யுனைடெட்இந்தியா, நியூஇந்தியா, ஓரியண்டல், நேஷனல் உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களும்,பல்வேறு தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், வாகனக்காப்பீடு, விபத்துக்காப்பீடு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பொதுக்காப்பீடு சேவைகளை வழங்கி வருகின்றன.

வாகனக் காப்பீட்டில்,பேக்கேஜ் பாலிசி, லைபிலிட்டி பாலிசி என இரு வகை உள்ளது.

இதில் வாகனங்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டில்,ஆக்ட்பாலிசி(அ) லைபிலிட்டிபாலிசி என குறிப்பிடப்படும் பாலிசிகளுக்கான பிரீமியத்தை அதிகரித்துள்ளதாக,காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம்(ஐஆர்டிஏ) அறிவித்தது.

இதையடுத்து,அரசு பொதுத் துறை பொதுகாப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பிரீமியம் உயர்வை ஏப்.25 முதல் அமல்படுத்தியுள்ளன. இதில் இருசக்கர வாகனங்கள் முதல் இலகுரக வாகனங்கள்,கனரக வாகனங்கள் என அனைத்து வகையான வாகனங்களுக்கும் பிரீமியம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட பிரீமியத்தில் இருந்து, குறைந்தது 10 சதவிகிதத்தில் இருந்து அதிகபட்சமாக 75 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக இருசக்கர வாகனங்கள், சொந்த உபயோக வாகனங்களைக் காட்டிலும், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், சரக்கு வாகனங்களுக்கு கடுமையாக பிரீமியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அத்தகைய வாகனங்களை இயக்குவோர், வாடகை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் சுற்றுலா வாகனங்கள்,ஆட்டோக்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது வரும். அதோடு சரக்கு வாகனங்களும் வாடகைக் கட்டணத்தை உயர்த்தும்போது, அதனைப் பயன்படுத்தும் வியாபாரிகள்,அதில் உண்டாகும் கூடுதல் செலவை ஈடுகட்ட,அத்தியாவசிய பொருள்கள் மீது விலை உயர்வு ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியாது.

எனவே,காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏ), புதிதாக உயர்த்தப்பட்டுள்ள,வாகனக் காப்பீட்டு பிரீமியம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கின்றனர் வாகன உரிமையாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.