சென்னை, டிச. 15: மும்பை லோகமான்ய திலகர் ரயில் நிலையத்துக்கும் திருநெல்வேலிக்கும் இடையே வாராந்திர குளிர்கால சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதனை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரயில் (01067), மும்பையிலிருந்து டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 14-ம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 4.55 மணிக்கு புறப்பட்டு, திங்கள்கிழமை காலை 5.05 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.
மறு மார்க்கத்தில் இந்த ரயில் (01068) திருநெல்வேலியில் இருந்து டிசம்பர் 26-ம் தேதி முதல் ஜனவரி 16-ம் தேதி வரை ஒவ்வொரு திங்கள்கிழமையும் மதியம் 1 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 11.45 மணிக்கு மும்பை லோக்மான்ய திலகர் ரயில் நிலையம் சென்றடையும்.
வள்ளியூர், நாகர்கோவில், இரணியல், குளித்துறை, திருவனந்தபுரம், கொல்லம் வழியாக இந்த ரயில் செல்லும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.