தாம்பரத்தில் இருந்து திருப்பதிக்கு பஸ் சேவை

தாம்பரம், செப். 3: சென்னை தாம்பரத்தில் இருந்து திருப்பதிக்கு பஸ் வசதியை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா சனிக்கிழமை தொடங்கி வைத்தார். 201-டி இலக்கமிட்ட தமிழ்நாடு போக்குவரத்துக் கழ
தாம்பரத்தில் இருந்து திருப்பதிக்கு பஸ் சேவை
Updated on
1 min read

தாம்பரம், செப். 3: சென்னை தாம்பரத்தில் இருந்து திருப்பதிக்கு பஸ் வசதியை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

201-டி இலக்கமிட்ட தமிழ்நாடு போக்குவரத்துக் கழகப் பேருந்து, பிற்பகல் 12 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு பல்லாவரம், பம்மல், பூந்தமல்லி, திருத்தணி வழியாக மாலை 4.15க்கு திருப்பதி சென்றடையும்.

இந்த பஸ் மாலை 4.45க்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு இரவு 8.45க்கு கோயம்பேடு பஸ் நிலையம் வந்தடையும். பின்னர் இரவு 9.30க்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு திருப்பதியைச் சென்றடையும். மறுநாள் காலை 6.15க்கு திருப்பதியில் இருந்து கிளம்பும் பஸ் 10.15க்கு தாம்பரம் வந்தடையும்.

தாம்பரம் அரசு பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு லட்டு வழங்கி பஸ்ûஸ இயக்கி வைத்து அமைச்சர் சின்னையா பேசியதாவது:

தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட தென் சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் திருப்பதி செல்ல, இனி தாம்பரத்தில் இருந்து பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. பஸ் கட்டணம் ரூ. 80. முன்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

தாம்பரத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும் பஸ்களின் எண்ணிக்கை பொதுமக்களின் தேவைக்கேற்ப படிப்படியாக உயர்த்தப்படும் என்றார் அமைச்சர் சின்னையா.

தாம்பரம் அண்ணா பேருந்து தொழிற்சங்கத் தலைவர் எம்.கூத்தன், நகர்மன்ற உறுப்பினர் நாகூர்கனி, தாம்பரம் போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளர் எஸ்.எத்திராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com