

சென்னை, ஜன.13: பக்தி இலக்கியப் படைப்பாளியான உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் படைப்புகள் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளன.
"விநாயகனே வினை தீர்ப்பவனே...', "நீ அல்லால் தெய்வமில்லை-முருகா', "சின்னஞ்சிறு பெண்போலே', "திருப்பதி மலை வாழும் வெங்கடேசா', "மதுரை அரசாளும் மீனாட்சி', "வென்றிடுவேன் நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்' போன்ற பக்திப் பாடல்களையும், "ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்', "அனுமன் சாலிஸா', "கனகதாரா ஸ்தோத்ரம்' போன்றவற்றின் மொழிபெயர்ப்புகளையும் படைத்தவர் கலைமாமணி உளுந்தூர்ப்பேட்டை சண்முகம். எளிய மொழியில், இனிய தமிழில் தமிழிசையை அறிமுகம் செய்துவைத்தவர் இவர். ஏறக்குறைய 4,000 பக்திப் பாடல்களுக்கு மேல் இயற்றியுள்ளார். சிவபெருமான், ஷீரடி சாய்பாபா, அம்மன், முருகர், இயேசுநாதர் மீது பாடல்கள் புனைந்துள்ளார்.
அவரது மகன் சாதகப்பறவை சங்கர், மகள் சகோதரி பிரித்திகா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் அவரது படைப்புகளை 32 நூல்களாக நெய்தல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. "மாதாவே மரியே', "மாசிலா ஏசு' ஆகிய கிறிஸ்தவ இலக்கிய நூல்களையும் எழுதியுள்ளார். குழந்தைகளுக்கான புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.
சென்னை புத்தகக் காட்சியில் நெய்தல் பதிப்பக அரங்கில் இப்புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.